விஸ்வரூபம் எடுக்கும் மருத்துவர்களின் பிரச்சினை: நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்கள்: மிரட்டிய திரிணாமுல் எம்பி…!!

Author: Sudha
19 August 2024, 5:29 pm

கடந்த 9ம் தேதி மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் உடலில் ரத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இளம்பெண் டாக்டரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் சங்கத்தினர் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக,கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தந்தை, ‘முதலில் முதல்வர் மம்தா பானர்ஜி மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், தற்போது இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கைகளை உயர்த்தினால், அவர்களின் கை விரல்களை துண்டிப்பேன்’ என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் பெங்கல் உதயன் குஹா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி அரூப் சக்ரபோர்த்தி, நீங்கள் வீட்டுக்கு போங்க அல்லது உங்களின் ஆண் நண்பருடன் எங்கே வேண்டுமானாலும் போங்கள்.

ஆனால், உங்கள் போராட்டத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்தாலும், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அப்போது, உங்களை நாங்கள் காப்பாற்ற மாட்டோம்,’ எனக் கூறினார்.

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி யின் இந்த பேச்சு எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல உள்ளது என பல தப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?