திருப்பதி மலைப்பாதையில் உலா வந்த கரடி… அடுத்தடுத்து விலங்குகள் நடமாட்டத்தால் பீதியில் பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
1 August 2023, 4:35 pm

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப்பாதையில் கரடி வந்ததால் பக்தர்கள் பீதியடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம். அவ்வாறு நடந்து செல்லக்கூடிய அலிபிரி மலைப்பாதையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் கரடி ஒன்று மான் பூங்கா எதிரே உள்ள நடைபாதையில் வனப்பகுதியில் இருந்து வந்தது. இதனை பார்த்த பக்தர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதம் சிறுத்தை இதே நடப்பாதையில் வந்து நான்கு வயது சிறுவனை கவ்வி சென்று வனப்பகுதியில் விட்டு சென்றது. இந்நிலையில், தற்போது நடைபாதையில் கரடி வந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?