இந்தப் புத்தாண்டில் அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும் : தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!!

Author: Babu Lakshmanan
14 April 2022, 10:46 am

தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் சித்திரை 1ம் தேதி தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை திருநாளாகவும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சித்திரை முதல் நாளான இன்று, ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி, அதிகாலை முதலே, கோவில்களில் பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள், என தெரிவித்துள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?