குழந்தைகளை காவு வாங்கிய பாபா கோவில் சுவர்.. கனமழையால் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பலி! !

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2024, 2:05 pm

பாபா கோவிலின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் ஷாபூரில் உள்ள ஹர்தௌல் பாபா கோவிலில் நடந்த மத விழாவின் போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ரேவா மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் பலியாகினர். இதனையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?