லாரி கவிழ்ந்து விபத்து : நடுரோட்டில் சிதறிக்கிடந்த மதுபாட்டில்கள்.. போட்டி போட்டு அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan22 மே 2022, 5:18 மணி
ஆந்திரா : மதுபான பாட்டில்கள் ஏற்றிச்சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் போட்டி போட்டு மது பாட்டில்களை மதுப்பிரியர்கள் அள்ளிச் சென்றனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிங்கரயகொண்ட அருகில் ஸ்ரீகாகுளம் பகுதியிலிருந்து மதனப்பள்ளி பகுதிக்கு பீர் பாட்டில்கள் கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பீர் பாட்டில்கள் சாலையில் கீழே சிதறியது.
பீர் பாட்டில் சரக்கு வாகன விபத்து குறித்து அறிந்த மது பிரியர்கள் சக மது பிரியர்கள் உடன் சிதறிக்கிடந்த பீர் பாட்டில்களை போட்டி போட்டு கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதன் காரணமாக ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள பீர் பாட்டில்கள் மதுப் பிரியர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
Views: - 791
0
0