20 வயதிலேயே இப்படியா..? அமெரிக்காவில் இரு இளம் இந்திய மாணவிகள் திடீர் கைது… போலீசாரிடம் கதறல்…!!

Author: Babu Lakshmanan
18 April 2024, 2:40 pm

அமெரிக்காவில் இரு இளம் இந்திய மாணவிகள் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியும், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஹொபோக்கன் நகல் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹொபோக்கன் நகர போலீசாருக்க தகவல் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க: பாஜகவுக்கு ‘ஒரு’ ஓட்டு போட்டால் ‘இரண்டாக’ பதிவு : பதறிய எதிர்க்கட்சிகள்.. நீதிமன்றம் ACTION!

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்தனர். அதில் ஒரு மாணவி, காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இதுபோன்று இனி செய்ய மாட்டேன் என்றும் கதறியுள்ளார்.

இருப்பினும், தவறு செய்திருப்பது நிரூபணமானதால், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?