அட தேர்தலை விடுங்க… வாங்க போஸ் கொடுங்க : கர்நாடகாவில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் இரு துருவங்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2023, 9:16 pm

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக போராடி வருகிறது. 40 சதவீத கமிஷன் புகார், ஹிஜாப், ஹலால் உணவு பிரச்சனை, தேர்தலில் சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுத்தது, எடியூரப்பாவின் அரசியல் ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக நெருக்கடி நிலையில் உள்ளது. மேலும் தேர்தலில் கர்நாடகா தலைவர்களில் யாரை முன்நிறுத்துவது என்பதில் பாஜக மேலிடம் குழம்பி போய் உள்ளது.

மாறாக காங்கிரஸ் கட்சியில் பாஜகவை போன்ற சூழல் இல்லை. தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதோடு பாஜகவின் ஓட்டு வங்கியாக இருக்கும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ெஷட்டர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக தான் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் மாறி மாறி ஒருவருக்கொருவர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் கொடிக்கான அடையாளத்தை சட்டையில் பொருத்துகின்றனர்.

மேலும் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் நெருக்கமாக ஒருவருக்கொருவர் தோள்களில் கைவைத்து சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!