ஆஹா பெரிய ட்விஸ்ட்.. கூட்டத்தை புறக்கணிக்கும் சிவசேனா.. கூட்டணி மாறும் உத்தவ் தாக்கரே?..

Author: Vignesh
5 June 2024, 3:49 pm

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 292 இடங்களில் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் படிக்க: தேர்தலில் மாஸ் காட்டிய சீமான்.. அள்ளிக் குவித்த வாக்குகள்; அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி..!

வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று காத்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக இருந்தன. இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடக்கும் நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், முக்கிய தலைவர்களை கூட்டணிக்கு இழுக்க இந்தியா கூட்டணி முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?