எதிர்பார்க்காத ட்விஸ்ட் : 3 மாநிலங்களுக்கு வேட்பாளர் பட்டியல்… ஒரே நேரத்ததில் அதிரடி காட்டிய காங்கிரஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2023, 11:17 am

எதிர்பார்க்காத ட்விஸ்ட் : 3 மாநிலங்களுக்கு வேட்பாளர் பட்டியல்… ஒரே நேரத்ததில் அதிரடி காட்டிய காங்கிரஸ்!!

சத்தீஸ்கரில் 30, தெலுங்கானாவில் 55, மத்திய பிரதேசத்தில் 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத், சிந்தவாரா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள். 2018 சட்டசபை தேர்தலில் பிஆர்எஸ் கட்சி 88 இடங்களிலும் காங்கிரஸ் 19 இடங்களிலும் பாஜக 3 இடத்திலும் வென்றது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 7 இடங்களில் வென்றது.

தெலுங்கானாவில் ஆளும் பிஆரஎஸ், காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது என்கின்றன கருத்து கணிப்புகள். இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகள் முடிவுகள்.

இந்நிலையில் தெலுங்கானாவில் 55 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது. தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளும் காங்கிரஸுகு சாதகமாக உள்ளன.

சத்தீஸ்கரில் காங்கிரஸ், பாஜக இடையே போட்டி என்றாலும் ஆம் ஆத்மியும் களமிறங்கி உள்ளது. சட்டசபையில் காங்கிரஸுக்கு 71, பாஜகவுக்கு 14 எம்.எல்.ஏக்கள் உள்ளன, தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக 55 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு தேவை 115 இடங்கள். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக ஆட்சியில் உள்ளது.

2018 சட்டசபை தேர்தலில் பாஜக 109; காங்கிரஸ் 114 இடங்களில் வென்றது. தற்போது ஆம் ஆத்மியும் களத்தில் உள்ளது. இந்த பின்னணியில் மத்திய பிரதேசத்தின் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், சிந்தவாரா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!