இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை… ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க பாஜக திட்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2023, 9:03 am

இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை… ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் பாஜக!!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான உத்திகளை வகுப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதிலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முழு ஈடுபாடு காட்டத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இத்துடன் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டமும் இன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் அதேபோல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!