நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!
Author: Rajesh1 February 2022, 11:27 am
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் ஆகும். அதேவேளை 2வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நாடாளுமன்றம் கூடியதும் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் பட்ஜெட் உரையை தொடங்கி பேசி வருகிறார். அவரது உரையில் கூறியிருப்பதாவது,
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்து இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது
கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை இந்தியா திடமாக எதிர்கொண்டுள்ளது. உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது. நடுத்தர வகுப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது
அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்து இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது
கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை இந்தியா திடமாக எதிர்கொண்டுள்ளது
சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் இருக்காது
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.2%ஆக இருக்கும் என கணிப்பு
அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை
எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும்
வரும் நிதியாண்டில் புதிதாக 25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்க இலக்கு
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய ரயில்கள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும்
ரயில்நிலையங்களையும், நகர்ப்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரியளவில் திட்டம்
போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
0
0