நீங்க வந்தா வன்முறை வெடிக்கும்… மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2023, 2:27 pm

ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூரில் உள்ள இம்பால் நகரத்திற்கு சென்றார் அங்கிருந்து சுராசந்த்பூருக்கு செல்லும் ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார்.

தொடர்ந்து, நாளை இம்பாலில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இந்நிலையில், மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மணிப்பூரின் சுராசந்த்பூர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்காக சென்ற போது ராகுல் காந்தியின் கான்வாயை பஷ்ணுபூரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். வன்முறையின் மையப்பகுதியான சுராசந்த்பூருக்கு ராகுல் சென்று கொண்டிருந்தார். போலீசார் அவரை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை.

ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “பிஷ்ணுபூர் அருகே ராகுல் காந்தியின் கான்வாய் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. எங்களுக்கு அனுமதி இல்லை என போலீசார் கூறுகின்றனர். எங்களை ஏன் தடுத்தார்கள் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்று கூறினார்.

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!