‘தொப்பை உள்ள போலீசாருக்கு விருப்ப ஓய்வு’… காவலர்களுக்கு வேட்டு வைத்த முதலமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2023, 1:19 pm

போலீஸ் என்றாலே தொப்பையும் நினைவுக்கு வருவது வழக்கம்தான். பணி அழுத்தம், உடற்பயிற்சி சரியாக செய்ய முடியாமல் போவதும், நேரத்திற்கு சாப்பிட முடியாததால் போலீசாருக்கு தொப்பை ஏற்படுகிறது.

சரினயான நேரம் ஒதுக்க முடியாததால் இந்த பிரச்சனைக்கு ஆளாகும் போலீசாருக்கு அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாசர்மா டிஜிபியிடம் காட்டம் காட்டியுள்ளார்.

இதன் விளைவாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். தற்போது தொப்பை பெருத்த போலீஸாருக்கு உலை வைத்திருக்கின்றன. அசாம் டிஜிபியான ஜி.பி.சிங், ட்விட்டர் வாயிலாக இன்று வெளியிட்ட அறிவிப்பில், உடலை ஒழுங்காக பராமரிக்காத போலீஸாருக்கு 3 மாதம் அவகாசம் தரப்படுகிறது.

அவர்களது ’பிஎம்ஐ’ அளவை(பாடி மாஸ் இன்டெக்ஸ் எனப்படும் உயர்த்துக்கு ஏற்ற எடையளவு), 30க்குள் குறைத்தாக வேண்டும். அப்படி குறைக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

3 மாதம் கழித்து, அதாவது ஆகஸ்ட் 15 முதல் அடுத்த 15 நாட்களில் மாநிலத்தின் அனைத்து போலீஸாருக்கும் பிஎம்ஐ அளவிடப்படும். தைராய்டு உள்ளிட்ட உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினை உள்ளோருக்கு மட்டும் இதில் விலக்கு கிடைக்கும்.

மற்றவர்களுக்கு மேலும் 3 மாத அவகாசம் அளித்து, அவர்களால் பிஎம்ஐ அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போனால், விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த பிஎம்ஐ அளவீட்டில் தொப்பை உள்ள போலீஸாரே முதலில் அடிபடுவார்கள் என்பதால், அசாம் போலீஸார் ஆசையாய் வளர்த்த தொப்பையை கரைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர். டிஜிபி ஜி.பி.சிங் தனது ட்விட்டர் பதிவு வாயிலாக வெளியிட்ட இந்த உத்தரவு, அசாம் மாநிலத்து அப்பாலும் காவல்துறை உயரதிகாரிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால் இதர மாநிலங்களிலும், தொப்பை போலீஸார் கலக்கம் அடைந்திருக்கின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!