வயநாடு நிலச்சரிவு.. சகதிகளில் சிக்கியிருக்கும் உடல்கள்.. காட்டிக் கொடுக்கும் ஸ்கேனர்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2024, 9:45 am

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்ங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று நான்காம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 316-ஐ கடந்துள்ளது.மேலும், நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும் போது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் அதனை ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும். நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் உடல் பாகங்கள் சிதைந்து இருப்பது, மண்ணோடு மண்ணாக பலர் புதைந்து உயிரை பறிக் கொடுத்தது, உறக்கத்தில் பலர் உயிரைவிட்டது என வயநாடு முழுக்க மரண ஓலம் ஓங்கி ஒலிக்கிறது. இந்த நிலையில், இந்த இயற்கை அசம்பாவிதத்தை தேசிய பேரிடராக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!