உங்க கோரிக்கையை ஏற்க முடியாது.. மீண்டும் கதவை தட்டிய கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2024, 2:00 pm

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார். இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி நெருங்குவதால் தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், “தனது உடல் எடை இயல்புக்கு மாறாக அதிக அளவில் குறைந்துள்ளது, சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள தனக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: கோவையில் பிரபல KMCH மருத்துவமனையில் நடந்த கொலை.. காவலாளிகள் 12 பேர் அதிரடி கைது : பகீர் சம்பவம்..!!

இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த நிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கை மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்தது. இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!