ஐயா.. எனக்கு உடம்புக்கு முடியலீங்க.. உடல்நிலையை பொருட்படுத்தாமல் சந்திரபாபுவை துரத்தி வந்த பெண்..!

Author: Vignesh
12 June 2024, 10:49 am

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடாவில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு சென்ற சந்திரபாபு நாயுடுவை காண பொது மக்கள் சாலையின் இருப்புறமும் திரண்டனர். வழிநெடுகிலும் கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்றனர். இந்நிலையில், கூட்டத்தை முடிந்து கொண்டு உண்டவல்லியில் உள்ள வீட்டிற்க்கு தனது கான்வே மூலம் சந்திரபாபு சென்று கொண்டுருந்தார்.

அப்போது சந்திரபாபுவை காண மதனப்பள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கான்வே வாகனத்தை துரத்தி கொண்டு பின்னாள் ஓடி வந்தார். இதனை கார் கண்ணாடியில் இருந்து பார்த்த சந்திரபாபு உடனடியாக கான்வே காரை நிறுத்தி அந்த பெண்ணை அருகில் அழைத்து பேசினார். அப்போது, அந்த பெண் தன் பெயர் நந்தினி என்றும் மதனபள்ளியில் இருந்து உங்களை பார்க்க வந்ததாக கூறினார்.

naidu

அவரைப் அருகில் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பெண் எங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. எங்கள் ஆசைப்படி நீங்கள் முதல்வர் ஆகிவிட்டீர்கள் சார் உங்கள் காலில் ஒரு முறை தொட்டு வணங்குகிறேன் என்று அந்த பெண்மணி கேட்க அதனை நிராகரித்த சந்திரபாபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுருந்ததாலும் உங்களை பார்க்க வந்ததாக நந்தினி சொன்னதும் முதலில் ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி கூறிய சந்திரபாபு அவரது மருத்துவ செலவிற்கு தேவையான உதவிகளை செய்யும்படி கட்சியினருக்கு சந்திரபாபு கூறி சென்றார்.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…