‘நீங்க தான் எங்க படத்துக்கு ஹீரோயின்’.. ஆசை வார்த்தைக் கூறி இளம்பெண் கூட்டு பலாத்காரம் : அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
8 March 2023, 5:43 pm

திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் கூறினார். இது தொடர்பாக தன்னிடம் பேச வேண்டும் என தெரிவித்தார். அதற்காக என்னை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வருமாறு அழைத்தார்.

அவரது பேச்சை நம்பி நானும் அங்கு சென்றேன். அப்போது, அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன் பின்பு அவர்கள் எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவது குறித்து இந்த தகவலும் என்னிடம் தெரிவிக்கவில்லை. இது பற்றி கேட்டால் அனைவரும் என்னைச் சேர்ந்து மிரட்டுகின்றனர். எனவே, என்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக கேரளாவில் பாலியல் வன்கொடுமையின் வழக்குகள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!