ஆளுநருக்கு எதிராக இனி நீங்க எதுவும் பேசக்கூடாது : ஆளுங்கட்சிக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 2:13 pm
Delhi High Court - Updatenews360
Quick Share

டெல்லி துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா பதவி வகிக்கிறார். கடந்த 2016ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு செய்யப்பட்டபோது, காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷன் தலைவராக இருந்த சக்சேனா, 1,400 கோடி ரூபாய் பணத்தை மாற்றியுள்ளார் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான அடிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆளுநர் சக்சேனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காதி முறைகேடு தொடர்பாக சமூக வலைதளங்களில் தெரிவித்த கருத்துகளை ஆம் ஆத்மியினர் நீக்க வேண்டும்.

வழக்கு விசாரணையில் உள்ளதால், கவர்னருக்கு எதிராக கருத்துகளை கூறக்கூடாது. இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 171

0

0