பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ : தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 8:11 pm

பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ : தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்!

உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

இந்த தொகுதியில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 8 முறை வாக்களிக்கும் நபர் தான் அந்த வீடியோவை எடுத்துள்ளார். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும் படிக்க: நீங்க வேற லெவல் ஆதிக்…Good Bad Ugly படத்தில் அஜித்தின் மிரட்டல் போஸ்டர் : கொண்டாடும் ரசிகர்கள்..!!

அந்த பதிவில், தேர்தல் ஆணையரே இதை கொஞ்சம் பாருங்கள், இப்போதாவது கொஞ்சம் விழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். அதில், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டிதான் என்று தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!