ப்ரோ 65W ஃபாஸ்ட் சார்ஜிங், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே போன்ற பல அம்சங்களுடன் ஓப்போ ரெனோ 4 அறிமுகமானது | விலை & விவரக்குறிப்புகள்

31 July 2020, 1:46 pm
Oppo Reno 4 Pro with 65W fast charging, 90Hz display launched in India
Quick Share

ஓப்போ இந்தியாவில் ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு, வளைந்த டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 720G செயலியுடன் வருகிறது.

ஓப்போ ரெனோ 4 ப்ரோவின் விலை, ரூ.34,990, இது ஆகஸ்ட் 5 முதல் இந்தியாவில் கிடைக்கும். ஸ்மார்ட்போனை அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்கலாம். இதில் ‘ஸ்டாரி நைட்’ மற்றும் ‘சில்கி வைட்’ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்கள் உள்ளன.

ஓப்போ ரெனோ 4 ப்ரோ 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 180 ஹெர்ட்ஸ் டச் சேம்ப்ளிங் ரேட் உள்ளது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை கொண்டுள்ளது. ரெனோ 4 ப்ரோ குவால்காமின் ஸ்னாப்டிராகன் 720G செயலி உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக, ரெனோ 4 ப்ரோ 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ஓப்போ ரெனோ 4 ப்ரோ 65W சூப்பர் வூக் 2.0 வேகமான சார்ஜிங் வேகத்துடன் 4,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மென்பொருள் முன்னணியில், இது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்OS 7.2 ஐ இயக்குகிறது. இதன் இணைப்பு விருப்பங்களில் புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-C போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக், இரட்டை சிம் ஆதரவு மற்றும் 4 ஜி VoLTE ஆதரவு ஆகியவை அடங்கும்.

Leave a Reply