கொரோனா வைரஸ் காரணமாக இந்த விவோ தயாரிப்புகள் வெளியாவதில் சிக்கல் | முழு விவரம்

24 March 2020, 7:51 pm
Vivo Suspends Upcoming Phone Launches in Wake of Coronavirus Outbreak
Quick Share

விவோ ஒரு புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான விவோ V19 இரட்டை கேமரா பஞ்ச்-ஹோல் மற்றும் குவாட் கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனை மார்ச் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. இருப்பினும், COVID-19 பரவலின் காரணமாக அடுத்து ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், நிலைமை  மேலும் மோசமாவதை பார்த்த விவோ நிறுவனம், தனது தயாரிப்புகளின் வெளியீட்டை காலவரை இன்றி ஒத்தி வைத்துள்ளது.

விவோ இந்தியா பிராண்டின் வியூக இயக்குனர் நிபூன் மரியா ஒரு உத்தியோகபூர்வ ட்வீட்டில், “இந்த கடினமான காலங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக குடிமக்களின் நல்வாழ்வே எங்களது முன்னுரிமையாக உள்ளது. எனவே, V19 இலிருந்து தொடங்கி எங்கள் புதிய தயாரிப்பு வெளியீடுகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம், அதே நேரத்தில் இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுகிறோம், மேலும் எங்கள் நேரத்தையும் வளங்களையும் COVID-19 நிவாரண முயற்சிகளுக்கு கவனம் செலுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள விவோவின் உற்பத்தி வசதி மூடப்பட்டதைத் தொடர்ந்து புதிய தொலைபேசி அறிமுகங்களை ரத்து செய்யும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை உள்ளூர் அரசாங்கத்தின் உத்தரவுக்கு ஏற்ப உள்ளது மற்றும் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வமாக,  நிபூன் மரியா அவர்கள் வெளியிட்ட டீவீட்டை கீழே காணுங்கள். எனவே, அடுத்த சில வாரங்களுக்கு விவோவிலிருந்து எந்த புதிய தொலைபேசிகளும் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க வேண்டாம். எவ்வாறாயினும், ரியல்மீ மற்றும் ரெட்மி முறையே தங்களது புதிய பட்ஜெட் மையமாகக் கொண்ட நர்சோ தொடர் மற்றும் முதன்மை Mi 10 தொடர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வெற்றிடத்தை நிரப்பும். எந்த தொலைபேசியைப் பார்க்க நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள்? உங்கள் கருத்துகளை கமெண்ட் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 

Leave a Reply