தாயின் தலையை வெட்டிய பரசுராமர்

15 December 2019, 1:31 pm
Quick Share

தந்தையின் சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகிற்கு காட்டியவர் பரசுராமன். இவர் தாயின் தலையை வெட்டினார் என்றாலும், அதன் பின்னர் அவர் கேட்ட வரம் முக்கியத்துவமானது. இவர் காத்தவீரிய அர்ஜுனனிடமிருந்து ராவணனை மீட்டதாக புராணக்கதைகள் உண்டு.

​பரசுராமர் பெயர் காரணம்:

பரசுராமர் பெயர் காரணம்:

மகா விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராமர் ஆவார். இவர் காலம் திரேதா யுகமாகும். இவர் ஜமதக்கினி -ரேணுகா தம்பதியரின் 5 மகன்களில் இளையமகனாவார்.

இவர் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் இருந்து ‘பரசு’ எனும் கோடாரியை பெற்றார். இதனால் இவர் பரசு – ராமர் என அழைக்கப்படுகிறார்.