பத்மாவதி தாயார் ப்ரம்மோற்சவம் : 3 டன் மலர்களில் அபிஷேகம்

4 December 2019, 7:02 pm
pmt-updatenews360
Quick Share

பத்மாவதி தாயாருக்கு, கார்த்திகை மாதம் 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் நிகழ்ச்சியானது வெகு சிறப்பாக, நடப்பது வழக்கம். நேற்று முன் தினம் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. பத்மாவதி தாயாருக்கான வருடாந்திர புஷ்பயாகத்தில், தேவஸ்தானம் நிர்வாகம் நடத்துகின்றது. வருடாந்திர பிரமோற்சவம் பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவடைந்தததை தொடர்ந்து, நேற்றும் மதியம் பத்மாவதி தாயர் உற்வருக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

பத்மாவதி தாயாருக்கு பலவகை பால், தயிர், இளநீர், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உட்பட பல பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் தாயாருக்கு தீப, தூப ஆராதனை செய்யப்பட்டு மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது.

பத்மாவதி தாயாருக்கு புஷ்ப யாகம் செய்ய கொண்டு வரப்பட்ட ரோஜா, சாமந்தி, அரளி, மல்லிகை, ஜாதி மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்களும், துளசி, வில்வம், மருவம் உள்ளிட்ட இலைகளால் அபிஷேகம் சிறப்பாக நடைப்பெற்றது.

பத்மாவதி தாயாருக்கு, அதன் பின்னர் 3 டன் எடை கொண்ட பல்வேறு வகை மலர்கலின் மூலமாக, தாயாருக்கு கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திர முழக்கத்துடன் புஷ்ப யாகம் நடத்தினர்.
சூட்சம தாயாரின் கழுத்தளவு நிறையும் வரை மூன்று முறை மலர்களை அர்ச்சனை செய்து சமர்ப்பித்து புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

தாயாருக்கு அபிஷேகம் செய்யும் பொருட்டு சுமார் 3 டன் எடையுள்ள மலர்கள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. தேவஸ்தான அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.