மார்கழி மாத பஜனை..!ஆன்மீக அன்பர்கள் பங்கேற்பு..!

17 December 2019, 12:54 pm
Thirupathur pooja UpdateNews360
Quick Share

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே மார்கழி மாதத்தையொட்டி நடைபெற்ற பஜனையில் ஆன்மீக அன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியில் ஸ்ரீ பால பக்த பண்டரி பஜனை குழு சார்பில் மார்கழி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை 5 மணியளவில் தொடங்கி 7 மணி வரை பஜனை பாடி வந்தனர்.

இந்த பஜனையில் 20க்கும்‌ மேற்பட்ட பக்தர்களுக்கும் , பொதுமக்களுக்கும் கலந்துகொண்டனர். முடிவில் பஜனை குழு சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வானது மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை நேரத்தில் இந்த பஜனை பாடி வீதியுலா வரும் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது…