ஸ்ரீபால்மொழி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்; திரளான திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்…

1 December 2019, 6:29 pm
Nagai Temple Kumbabishegam-Updatenews360
Quick Share

நாகை: வடக்குபொய்கைநல்லூர் பழமை வாய்ந்த ஸ்ரீபால்மொழி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தில் திரளான திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கைநல்லூர் வீரன்குடிகாடு கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீபால்மொழிஅம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா கடந்த 29ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேக தினமான இன்று காலை நான்காம் கால யாகசலை பூஜையில் மகா பூர்ணாஹதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, கோயிலை சுற்றி வந்து, விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் ஒலிக்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.