ஆசியாவில் உயர்ந்த அருள்மிகு புலியகுளம் விநாயகர் பாகம்-2

26 August 2020, 5:00 am
Quick Share

ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள முந்தி விநாயகர் கோவிலில் உள்ளது. இங்கு அமைந்துள்ள விநாயகப் பெருமான் ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனி கர் என போற்றப்படுகிறார். பக்தர்கள் மற்றும் 21 சிற்பக் கலைஞர்களின் உழைப்பால் ஆறு ஆண்டுகளில் அழகான முந்தி விநாயகர் இங்கு உருவானார்.

இந்த சிலையை செய்ய இவ்வளவு பெரிய கல்லை தேர்வு செய்வது என்பது காரியம் அல்ல, பல இடங்களில் தேடி அலைந்து முடிவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி எனும் ஊரில் 20 அடி ஆழத்தில் இருந்து எந்தப் பின்னமும் இல்லாத பாறையை தேர்வு செய்து வெட்டி எடுத்தனர். தோராயமாக அங்கேயே வைத்து விநாயகப் பெருமான் வடிவில் செதுக்கி எடுத்தனர். முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் எட்டடி கணமும் 11 அடி 10 அங்குல அகலம் கொண்டவராக சுமார் ஒரு டன் எடையுள்ள வராக திகழ்கிறார்.

இதற்கான தயார் செய்யப்பட்ட தனி ஊர்திகளில் ஏற்றிக் கொண்டு கோவை யின் இருப்பிடத்துக்கு கொண்டுவந்து சேர்த்தனர். பிரத்தியோகமான ஒரு சாய்வு தளம் அமைத்து நிலைக்குக் கொண்டுவர மட்டும் 18 நாட்கள் பிடித்தன.
படுக்கை வசமாக வைத்து துல்லியமாக வடிவமைக்கப்பட்டு நுணுக்கமாக உருவாக்கினர். எந்த ஒரு எந்திரத்தின் துணையும் இல்லாமல் இரும்புச் சங்கிலி மற்றும் உருளைகளின் உதவியால் முழுவதும் மனித சக்தியாலேயே நிலையினிற் கொண்டு வந்து ஸ்தாபித்தனர் .

இந்த கோவில் அந்தப் பகுதி மக்களால் 1998ஆம் வருடம் ஜகத்குரு ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம் துதிக்கை வலம் சுழித்து காட்சி தருகிறார். 4 திருக்கரங்கள் வலது முன் கையில் தந்தமும் பின்கரத்தில் அங்குசமும் இடது முன் கரத்தில் பலாப்பழமும் பின்கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

அவரின் பீடத்திலும் தாமரை மேல் நோக்கி விரிந்து இருப்பது போன்ற வேலைப்பாடு மிகவும் அழகானது. வாசுகிப் பாம்பை தன் வயிற்றில் கட்டிக் கொண்டு இருப்பதால் நாக தோஷத்தை நீக்கி அருள் பாலிக்கிறார். கணபதி , அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக் கொண்டு விநாயகப் பெருமானாக தோன்றி இது போன்ற காட்சி அளிக்கிறார் . கணபதி அவரின் வலது பகுதி ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளதால் தரிசிக்கும்போது ஒரு ஆண் யானையின் கம்பீரமான தோற்றம் பக்தர்களை பிரமிக்க வைக்கிறது .

அரச மரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிப்பதால் அருள் சக்தி அதிகம். இடது திருவடியில் சித்த லட்சுமி அம்சமான பத்ம சக்கரத்தை கொண்டுள்ளதால் நாடி வரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குகிறார். ஆசியாவின் உயர்ந்த கணபதியை வணங்க புலியகுளம் புறப்பட்டு வாருங்கள்.

Views: - 36

0

0