மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்த பாதிப்புகள்..! இந்தியாவில் ஒரே நாளில் 1,15,736 கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு..!

7 April 2021, 1:20 pm
Corona_India_Updatenews360
Quick Share

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,15,736 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது இந்தியாவில் கடந்த வருடம் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தினசரி அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இவற்றில், மகாராஷ்டிராவில் மட்டும் கிட்டத்தட்ட 55,000 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் 9,921 பாதிப்புகளுடன் புதிய உச்சநிலையை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 630 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை 1,66,177’ஆகக் கொண்டுள்ளது.

நேற்று 59,856 பேர் சிகிச்சை முடிந்து வீடு  திரும்பினாலும், தற்போதும் நாட்டில் மொத்தமாக 8,43,473 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,17,92,135 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,03,844 புதிய பாதிப்புகள் கடந்த ஏப்ரல் 5’ஆம் தேதி பதிவாகியுள்ளன. தடுப்பூசி போடப்பட்டப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,70,77,474 ஆக உள்ளது.

ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மொத்தம் 25,14,39,598 மாதிரிகள் கொரோனா வைரசுக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. இவற்றில் 12,08,329 மாதிரிகள் நேற்று மட்டுமே பரிசோதிக்கப்பட்டன.

நோயிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,17,92,135 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் மேலும் 1.30 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்று மத்திய அரசு எச்சரித்தது மற்றும் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பைக் கோரியுள்ளது.

Views: - 0

0

0

Leave a Reply