பகவத் கீதை: ஸ்லோகம் – விளக்கம்

10 December 2019, 10:57 am
bg-updatenews360
Quick Share

பகவத் கீதா ஸ்லோகம் :

ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி!
அஜாநா மஹிமாநம் தவேதம் மயா ப்ரமாதாத் ப்ரணயேந வாபி!!
யச்சா வஹாஸார்த மஸத்க்ருதோஸி விஹார ஸய்யாஸந போஜநேஷு!
ஏகோத வாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹம ப்ரமேயம்!!

பகவத் கீதை ஸ்லோக விளக்கத்தின் பொருள்:
பகவானே! பக்தனாகிய நான், தங்களின் மகிமையான பெருமையையும், ப்ரம்மாண்டத்தையும் உணராமலும், அறியாமலும், ஆழமான அன்பினாலும், அசட்டையான அஜாக்கிரதையாலும் , உன் மகிமை உணராமல், கிருஷ்ணனே, யாதவனே, நண்பனே என்றெல்லாம், நான் துடுக்குத்தனமாக உன்னை என் நாவால் உன்னை அழைத்து வரலானேன்.

அச்சுதனே! கேசவனே ! உன் மகத்துவம் உணர்ந்தேன் ! உன் பெருமை அறிந்து இன்புற்றேன் ! எனது கேளிக்கையான பேச்சின் சபோதும், படுக்கையில் நான் கண் உறங்கும் நேரத்திலும், உட்கார்ந்திருக்கும் வேளையிலும், உண்ணும் நேரத்திலும், தனியாக இருக்கும் நேரங்களிலும், நண்பர்களின் முன்னிலையிலும், க கேலியாக தங்களை அவமதித்தும் கூட நடந்திருப்பேன், கற்பனையிலும் கூட நினைத்துப் பார்க்க இயலாத மகிமை பெற்ற தங்களுக்கு நான் அறியாமையின் காரணமாக நான் இழைத்த குற்றங்கள், பெரும் குறைகளை தாங்கள் தயவு கூர்ந்து அருள் செய்யும் மனதுடன் பொறுத்து அருள வேண்டுக் கொள்கின்றேன் என்பதாக பொருள் விளக்கம் கொண்டிருக்கும் ஸ்லோகமாக அமைந்து இருக்கின்றது.