ப்ரம்ம சூத்திரம் : ஆன்மீக தரிசனம்

13 December 2019, 9:38 am
bs-updatenews360
Quick Share

பெருமுந்நூல் அல்லது பிரஸ்தான திரயம் என்கின்ற உபநிடதம், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் போன்ற இந்து மதத்தின் அடிப்படையான நூல்கள் மூன்றையும் ஒருசேர குறிக்கின்ற சொல்லாகும். இது போன்ற நூல்கள் சுருதி பிரஸ்தானம், ஸ்மிருதி பிரஸ்தானம், தர்க்கப் பிரஸ்தானத்தின் அடிப்படையில் அமைந்து இருக்கின்றது.

சுருதி பிரஸ்தானம் என்னும் உபதேச பிரஸ்தானம்

வேதங்களின் இறுதிப் பகுதியில் அமைந்து இருக்கின்ற ஞான காண்டம் தான், உத்தர மீமாம்சை என்பது. உத்தர மீமாம்சை அல்லது உபநிடதங்கள் ஆதாரமாக சுருதியை அடிப்படையாகக் தன்னகத்தில் கொண்டது. உபநிடதங்கள் பிரம்மத்தை உபதேசிப்பதன் காரணமாக, உபதேச பிரஸ்தானம் என்றும் வழக்கமாக விளக்குவார்கள். வேதங்கள் மனிதர்களின் மூலமாக எழுதப்பட்ட நூல்கள் அல்ல. ரிஷிகள் தங்களின் தியான நிலைகளில் முழுக்க ஆழ்ந்திருந்த சமயத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஆன்மீக உண்மைகளின் தத்துவ தரிசனம் தான், வேதங்கள் என்கின்ற தொகுப்பு ஆகும்.

ஸ்மிருதி பிரஸ்தானம் என்னும் சாதனை பிரஸ்தானம்

ஸ்மிருதியை அடிப்படையாகக் தன்னகத்தில் கொண்டது பகவத் கீதை. பகவத் கீதையில் இருக்கின்ற செய்யுல்கள் ஸ்லோகங்கள் என்று அழைக்கப்படுவது வழக்கம். ஒரு ஆன்மீக ஞானம் வேண்டுகின்ற தெய்வீக சாதகன் என்கின்ற ஒருவன், இறை ஞானம் பெறுவதற்கு தேவையான சாதனைகளை பற்றி எடுத்து கூறுகின்ற காரணத்தால், சாதனை பிரஸ்தானம் என்றும் அழைப்பது வழக்கம்.

தர்க்கப் பிரஸ்தானம் என்னும் யுக்தி பிரஸ்தானம்

பிரம்ம சூத்திரம், தர்க்கப்பிரஸ்தானம் அல்லது நியாயப் பிரஸ்தானத்தின் அடிப்படையில் அமைந்த நூலாகும். யுக்தி பிரஸ்தானம் என்றும் கூட அழைப்பது வழக்கமாகும். உபநிடதங்களுக்கிடையிலான வேறுபாடுகள் போன்று இருப்பதாக தோன்ருக்கின்ற கருத்துக்களை யுக்தி பூர்வமாக சமன்படுத்தி, இறைவன், உலகம், மனிதன் போன்ற தத்துவங்களில் உபநிடதங்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கும் சாங்கியம், வைசேடிகம், நியாயா, யோகா, பூர்வ மீமாம்சை போன்ற தத்துவங்களை யுக்திப் பூர்வமான தர்க்க நிலைப்பாடுகளுடன், வேதாந்த கருத்துக்களை நிலைநாட்டுவதே பிரம்ம சூத்திரத்தின் மிகவும் முக்கியமான நோக்கமாகும். பிரம்ம சூத்திரத்தில் இருக்கின்ற செய்யுட்களை சுலோகங்கள் என்று அழைப்பது வழக்கம்