பிரம்மன் வழிபட்ட காஞ்சி விளக்கொளி பெருமான் : ப்ரம்மக்ஷேத்ரம்

9 December 2019, 7:50 pm
bm-updatenews360
Quick Share

கார்த்திகை திருநாளன்று காஞ்சிபுரத்தில் சேவை சாதிக்கின்ற, விளக்கொளி பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு சமர்ப்பிக்கின்றனர். பூமியில் பிரம்மனுக்கு திருக்கோவில் இல்லாத காரணத்தால், பிரம்மன், சிவபெருமானை நோக்கி யாகம் நடத்தலானார்.

ப்ரம்மா தனது மனைவியான சரஸ்வதி தேவியை உடன் வைத்துக் கொள்ளாத காரணத்தால், யாகம் முழுமை அடையவில்லை.

பிரம்மனின் யாகத்துக்கு அழைக்கபெறாத காரணத்தால், கோபத்திற்கு ஆளான சரஸ்வதி தேவியை விஷ்ணு பகவான் சமாதானம் செய்து ன்வைத்தார். அதன் பிறகு, விஷ்ணு ஜோதி வடிவமாக மாறி வடிவமெடுத்தார். அதன் காரணமாக, ப்ரம்மா நடத்திய யாகம் தடையின்றி நடைபெற்றது.

காஞ்சீபுரம் பெருமாளுக்கு விளக்கொளி பெருமாள் என்கின்ற திருப்பெயர் அழைக்கப்படலானது. திரு கார்த்திகை தினத்தன்று, காஞ்சியின் விளக்கொளி பெருமானின் சன்னதியில், தீபம் ஏற்றி வணங்கப்படுவதால், நினைத்தது நடைபெறும் என்பது ஐதீகமாக உருவானது.