உய்விக்க வந்த யுகாதி : ஏன் கொண்டாடுகிறோம்… எப்படி கொண்டாட வேண்டும்..?

13 April 2021, 11:12 am
ugadi festival - updatenews360
Quick Share

இன்று பிறந்துள்ள தெலுங்கு புதுவருடத்திற்கு அனைவருக்கும் யுகாதி தின வாழ்த்துக்கள்.

யுகாதி என்றால் யுகத்தின் ஆதி ஆரம்பம் என்று பொருள். யுகாதி பண்டிகை அன்றுதான்பிரம்மா உலகத்தைப் படைத்ததாகக் கூறுவார்கள். யுகாதி தினம் புதிய வேலை, கல்வி தொழில்
போன்றவற்றை துவக்குவது சிறந்தது. வசந்த காலத்தின் பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

யுகாதி அன்று ஆறு சுவைகள் கொண்ட உணவாக யுகாதி பச்சடி செய்வார்கள். வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் ‌விதமாக யுகா‌தி ப‌ச்சடி – வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவா‌ர்க‌ள்.

யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவா‌ர்க‌ள். மாலையில் வாசலில் விளக்கேற்றி , கோவிலுக்கு சென்றுசுவாமி தரிசனம் செய்வது வழக்கம். வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.

இந்த புத்தாண்டு மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் கொண்டுதான் இருக்கும். மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம் அல்ல. துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று உணர்த்தும் வகையில் யுகாதி பச்சடி அமையும். வாழ்க்கை என்பது கசப்பும் இனிமையும் கலந்து (சுக துக்கத்துடன்) இருக்க வேண்டும் என்பதற்காகவே கோவிலுக்கு சென்று வழிபட்டு வேப்பிலை, சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

புத்தாண்டு தினத்தை ஒட்டி வீட்டு பெரியவர்களை காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவது சிறப்பு. உகாடித் திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கான புது வருடப் பிறப்பாகும். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கோலாகலமாக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் கடவுளை வழிபட்டு இந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில்தான் பிரம்மா உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குமான தலை எழுத்தை எழுதியதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் இந்நாளிலிருந்து அவர்களின் வாழ்க்கைத் தொடங்குவது போல் வருடத்தின் முதல் நாளாக கொண்டாடுகின்றனர்.

இந்நாளில் பச்சடி, வெல்லம் , வேப்ப இலை , வேப்பிலைக் காய், வேப்பம் பூ , புளிச் சாறு அல்லது புளி , மாங்காய் போன்றவை பண்டிகையின் சிறப்பு உணவாக கடவுளுக்கு படையலிடுகின்றனர். நாளை அனைவரும் சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புது உடை உடுத்தி வீட்டை பண்டிகைக்கு ஏற்ப சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

Views: - 34

0

0