தாண்டிக்குடி கோவிலுக்கு அடிப்படை வசதி வேண்டும்… பக்தர்கள் கோரிக்கை…!!

14 December 2019, 6:04 pm
Kodai Kovil- updatenews360
Quick Share

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிகுடி என்ற இடத்தில் மலை உச்சியில் பால முருகன் கோவில் அமைந்துள்ளது.

இந்த முருகன் கோவில் கொடைக்கானலில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இந்த கோவிலின் சிறப்பு, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்தக் கோயிலைப் பற்றி சில சிறப்பான செய்திகளை பற்றி முன்னோர்கள் கூறியுள்ளனர். அது என்னவென்றால் இந்தக் கோவில் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் முருகனே இந்த இடத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது.

தாண்டிக்குடி மலைவாழ் மக்கள் இந்தக் கோயிலை வழிபட்டு வருகின்றார்கள். இந்தக் கோயிலில் கருவறை மேற்கு நோக்கி உள்ளது. இங்குள்ள முருகன் குழந்தைபோல் மக்களுக்கு அருள்பாலிப்பதால் இந்த முருகன் பெயரை பாலமுருகன் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இக்கோயிலை சுற்றி காலபைரவர் கோவில், இடும்பன் கோவில், நவகிரக கோவில், கேது, ராகு கோவில்கள் அமைந்துள்ளது. இந்து கோவில் 1949 ஆம் ஆண்டு முதல் தாண்டிக்குடி பொது மக்கள் வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த ஊருக்கு பெயர் அந்த காலத்தில் தாண்டிக்குதி என்றே அழைக்கப்பட்டது. நாளடைவில் தாண்டிக்குடி ஆக மாறியது. முருகன் இந்தக் கோவிலில் இருந்து பழனிக்கு தாண்டிக் குதித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த ஊரின் பெயர் தாண்டிக்குதி என்று பெயர் வந்துள்ளதாக ஊர்மக்களால் பேசப்பட்டு வருகின்றன.

இந்துக் கோயிலின் அருகே பாறையில் இயற்கையாகவே மயில், பாம்பு, ஆஞ்சநேயர் சிலை போன்ற வடிவங்கள் உள்ளது. முருகன் கூட அந்த முந்தைய காலத்தில் இந்த பாறைகளில் விளையாடியதாக கூறப்படுகிறது.

தற்பொழுது இந்த பால முருகன் கோவிலுக்கு கொடைக்கானல் மட்டுமல்லாமல் சென்னை, மதுரை, மலேசியா என தமிழகத்திலுள்ள சில பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் முருகனை வந்து வழிபட்டு வருகின்றனர்.

இது போன்ற சிறப்பு வாய்ந்த் பாலமுருகன் கோவிலில் அடிப்படை வசதி செய்து கொடுத்தால் இந்த கோவிலுக்கு இன்னும் அதிகமான பக்தர்கள் வருவதற்கு வசதியாக இருக்கும் என்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.