ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 : எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட வேண்டும்?

1 September 2020, 1:10 pm
raagu-kedhu-peyarchi updatenews360
Quick Share

வழக்கமாக சனிபெயர்ச்சியை எல்லா தரப்பினரும் ஆவலோடும் அச்சத்தோடும் கவனிப்பார்கள். அதற்கு இணையானது ராகு – கேது பெயர்ச்சி. அதுவும் கொரோனா கால கட்டத்தில் வருவதால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ராகுபகவான் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் தேதியான 01.09.2020 செவ்வாய்க்கிழமை அன்று மிருகசீரிஷம் மூன்றாம் பாதமான மிதுன ராசியில் இருந்து மிருகசீரிஷம் இரண்டாம் பாதமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

கேதுபகவான் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் தேதியான இன்று மூலம் முதல் பாதமான தனுசு ராசியில் இருந்து கேட்டை நான்காம் பாதமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, ராகுபகவான் சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதியான 23.09.2020 புதன்கிழமை அன்று மிருகசீரிஷம் மூன்றாம் பாதமான மிதுன ராசியில் இருந்து மிருகசீரிஷம் இரண்டாம் பாதமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

கேதுபகவான் சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதியான 23.09.2020 புதன்கிழமை அன்று மூலம் முதல் பாதமான தனுசு ராசியில் இருந்து கேட்டை நான்காம் பாதமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

ராகு கேது பெயர்ச்சியால் நிகழ இருக்கும் இன்னல்களும், தடைகளும் குறைய ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய தெய்வங்களை பற்றி பார்ப்போம்.

raasi-palan-updatenews360

மேஷம் ராசி :

வெள்ளிக்கிழமைதோறும் துர்க்கை அம்மனுக்கு அகல் விளக்கேற்றி வழிபட தேக்க நிலைகள் யாவும் நீங்கி பொருள் வரவு மேம்படும்.

ரிஷபம் ராசி :

வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளை மலர்களை கொண்டு மாரியம்மனை வழிபாடு செய்து வர குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

மிதுனம் ராசி :

வியாழக்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்து வர உத்தியோகம் நிமிர்த்தமான இன்னல்கள் குறைந்து மேன்மை உண்டாகும்.

கடகம் ராசி :

செவ்வாய்க்கிழமைதோறும் சர்வ தேவதைகளை வெள்ளை நிற பூக்களை கொண்டு வழிபாடு செய்து வர எண்ணத் தெளிவு உண்டாகும்.

சிம்மம் ராசி :

செவ்வாய்க்கிழமைதோறும் நாக தேவர்களை வழிபாடு செய்து வர ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

கன்னி ராசி :

தினந்தோறும் கோமாதாவை வழிபாடு மற்றும் பராமரிப்பு பணிகள் செய்து வர தொழில் நிமிர்த்தமான தனவரவுகள் மேம்படும்.

துலாம் ராசி :

வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளை மலர்களால் துர்க்கை அம்மனை ராகு நேரத்தில் வழிபாடு செய்துவர நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், எதிர்பாராத உதவியும் கிடைக்கும்.

விருச்சிகம் ராசி :

செவ்வாய்க்கிழமைதோறும் சிவப்பு நிற பூக்களால் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர எதிர்காலம் தொடர்பான செயல்களில் இருந்துவந்த தடைகள் அகலும்.

தனுசு ராசி :

வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளை தாமரை மலர்களால் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர பணி நிமிர்த்தமான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் ராசி :

வெள்ளிக்கிழமைதோறும் சப்த கன்னிமார்களை வணங்கி ஏழு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வெள்ளை நிற பூக்களால் வழிபாடு செய்து வர பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

கும்ப ராசி :

புதன்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, மஞ்சள் நிற மலர்களால் வராகி அம்மனை வழிபாடு செய்து வர பூர்வீக மற்றும் புத்திரர்கள் தொடர்பான கவலைகள் அகலும்.

மீனம் ராசி :

செவ்வாய்க்கிழமைதோறும் மஞ்சள் நிற பூக்களினால் அம்மனை வழிபாடு செய்துவர செய்யும் முயற்சிகளுக்கு உதவிகள் மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க பெறுவீர்கள்.

ராகு கேது பெயர்ச்சியால் ரம்மியமான பலன்களை பெற உரிய தெய்வங்களை வழிபட்டு உயர்வோம்.

Views: - 0

0

0