பசுதான புண்ணியம் தரும் பகவான் ராஜகோபாலசுவாமி

30 October 2020, 5:16 am
Quick Share

கடலூர் மாவட்டத்தில் புதுப்பாளையத்தில் அருள்மிகு ராஜகோபாலசுவாமி ரம்மியமாக காட்சி அளிக்கிறார்.
இத்தலத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் தினம் ஒரு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவகிந்திபுரம் பெருமாளின் தம்பியாக இவரை வணங்குகிறார்கள்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு பெற்றது. இத்தலத்திற்கு ஒரு முறை வந்து தரிசனம் செய்தாலோ, அல்லது ஓரிரவு தங்கினாலோ ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகிறது. ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், வைராக்கியம் என ஐந்து கல்யாண குணங்களுடன் இத்தல பெருமாள் அருள்பாலிக்கிறார்.

எனவேதான் இவரை தரிசித்த மாத்திரத்தில் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி தருகிறார். நினைத்த காரியத்தை உடனே முடித்து தரும் இந்த பெருமாள் கடலூர் மாவட்டத்தின் தலைவனாக விளங்குகிறார். இங்குள்ள அனுமன் அவருக்கே உரிய சிறப்பாக ராமரின் தூதுவனாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

கோயில் சிறப்பம்சமாக, திருப்பதியில் வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை இத்தலத்தில் செலுத்தலாம். இவரை திருப்பதியின் அண்ணன் என்பார்கள். வாருங்கள்.
தலத்தை திருப்தியாய் தரிசிப்போம்.