சபரிமலை ஐப்பசி மாத பூஜைக்கு நாள்தோறும் 250 பேர் மட்டுமே அனுமதி : கேரள அரசு முடிவு

By: Babu
8 October 2020, 12:16 pm
sabarimala sudharsana-updatenews360
Quick Share

திருவனந்தபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐப்பசி கால பூஜைக்கு நாள்தோறும் 250 பேரை மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து 5 மாதங்களுக்கு மேலாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், வழக்கமான பூஜைகள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன.

இதனிடையே, கொரோனா ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்ட மத்திய அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதியளித்தது. அதன்படி, கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, சபரிமலையில் அடுத்த மாதம் தொடங்கும் மண்டல பூஜைக்கு நாள்தோறும் 1000 பக்தர்களை அனுமதி முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், சபரிமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஐப்பசி மாத பூஜைக்கு தினமும் 250 பேரை மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 16ம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வரும் பக்தர்கள், கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றும், நிலக்கல்லில் அனைத்து பக்தர்களுக்கு ஆண்டிஜன் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 47

0

0