தேனி காசி விஸ்வநாதர் திருக்கோவில் : அரசு பள்ளி மாணவிகள் தூய்மை பணி

3 December 2019, 9:24 pm
ksi-updatenews360
Quick Share

தேனி மாவட்டத்தின், கம்பம் நகரத்தில் இருக்கின்ற அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் மாணவிகள் சார்பிலான நாட்டு நலப் பணித் திட்டத்தின் மூலமாக, ‘காசி விசுவநாத சுவாமி கோவில்’ வளாகத்தில், மரக் கன்றுகளை நாட்டினாரகள். மேலும் அவர்கள், அருள் மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோவில், வளாகத்தில், திங்கள் கிழமை உழவாரப்பணிகள் மேற்கொண்டு தூய்மைப்படுத்தினாரகள்.

கம்பம் ஆங்கூர்ராவுத்தா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், கம்பராயப்பெருமாள் காசிவிசுவநாத சுவாமி கோவில் வளாகத்தின் தேங்கி கிடக்கின்ற குப்பை கூளங்களை அகற்றி தூய்மை செய்யும் பணியி ஈடுபட்டார்கள். திரு கோவில் வளாகத்தின் சிதறி கிடந்த நெகிழி பொருட்களை நீக்கும் பணியில் ஈடுபட்டாரகள். மேலும், மண்டிக்கிடக்கும், புதா் செடிகளையும் அகற்றினார்கள்.

திரு கோவில் வளாகத்தின், பக்தா்களிடம் நெகிழி ஒழிப்பு, புவி வெப்பமயமாகுதல், மழை நீா் சேகரிப்பு விழிப்புணர்வு, போன்ற பணிகளை மேற்கொண்டனா்.பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்டத்திற்கான ஏற்பாடுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியை கே.மகேஷ்வரி, உதவி தலைமை ஆசிரியை பி.மீனாட்சி, நட்டு நலப்பணி திட்ட அலுவலா் ஜெ.ஹேமலதா ஆகியயோரின் மேற்பார்வையில் நிகழ்த்தப்பட்டது.