கார்த்திகை பிரம்மோற்சவம் பஞ்சமி தீர்த்த உற்சவம்..!

2 December 2019, 4:46 pm
Temple-updatenews360
Quick Share

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் பஞ்சமி தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒன்பதாவது நாளான இன்று காலை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற்றது. பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெறும் கோவில் தெரு குளமான பத்மசரோவரத்தில் பத்மாவதி தாயார் புராணகாலத்தில் கார்த்திகை பஞ்சமி நாளன்று தாமரை மலர் ஒன்றின் மீது அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

எனவே கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று இந்த திருக்குளத்தில் புனித நீராடுவது பிறவிப்பயன்களை நீக்கும் வல்லமை கொண்ட புண்ணிய ஸ்தானம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். பஞ்சமி தீர்த்த உற்சவத்தினை முன்னிட்டு பத்மாவதி தாயார், சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவ மூர்த்திகள் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக மாட வீதிகள் வழியாக திருக்குளத்தில் இருக்கும் மண்டபத்தை அடைந்தனர்.

அங்கு தாயாருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால்,தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் இது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் திருமஞ்சனம், அலங்காரம், தூப தீப நைவேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டன.
தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் சக்கரத்தாழ்வாரை திருக்குளத்தில் கொண்டு சென்று மூன்று முறை மூழ்க செய்து பஞ்சமி தீர்த்த உற்சவம் நடத்தினர். அப்போது திருக்குளத்தை நான்கு புறங்களிலும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் புனித நீராடினர். பஞ்சமி தீர்த்த புனித நீராடுவதற்காக ஏராளமான அளவில் பக்தர்கள் திருச்சி அவர்களுக்கு இன்று காலை முதலே குவிந்திருந்தனர்.