பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்..!

17 December 2019, 2:53 pm
tvmalai temple UpdateNews360
Quick Share

திருவண்ணாமலை : மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அண்ணாமலையார் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கும் அண்ணாமலையார் ஆலயத்தில் இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது.

பின்னர் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரியநாயகர் மற்றும் பராசக்தி அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு இருந்தது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் பெரியநாயகர் மற்றும் பராசக்தி அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்துவது வழக்கம்.

அதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு கொடிமரம் அருகில் மார்கழி மாதம் முழுவதும் பாராயணம் செய்யக்கூடிய மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களை முனைவர் ஸ்ரீனிவாச வரதன் அவர்களால் திருவெம்பாவை சொற்பொழிவு ஆரம்பமானது.

மார்கழி மாதம் முழுவதும் உஷத்கால அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மனுக்கு மலர் பாவாடை மற்றும் மலர் கிரீடம் இந்த மாதம் முழுவதும் அணிவிப்பது வழக்கம். இன்று மார்கழி மாத முதல் நாளையொட்டி அண்ணாமலையார் ஆலயத்தில் இன்று அதிகாலை முதற்கொண்டே கர்நாடகா ஆந்திரா கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் திரளாக வந்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள்.