திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை மூன்றாம் நாள் இரவு தீபத்திருவிழா..!

4 December 2019, 8:32 am
Deepa Festivel-updatenews360
Quick Share

திருவண்ணாமலை :நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும்,பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் தீபத்திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகள் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனம் முருகர் வெள்ளி மயில் வாகனம் அண்ணாமலையார் சிம்மவாகனம் அம்மன் அன்ன வாகனம் சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனம் அண்ணாமலையார் ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனைதொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் எழுந்தருளி ஒரே நேரத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கும் பஞ்ச தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி வெள்ளத்தில் மிதந்தார்கள் அதைத்தொடர்ந்து விநாயகர் முருகர் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளும் மாடவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாட வீதி உலாவின்போது சிவ வாத்தியம் என்று அழைக்கப்படுகின்ற ஒடல் வாத்தியம், மற்றும் நபரி, சங்கு ஒலிகள் இசைக்கப்பட்டு பக்தர்கள் பரவசத்துடன் பஞ்ச மூர்த்திகளுடன் மாடவீதி வந்தார்கள்