ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்த ஆப்கானிஸ்தான்… த்ரில் வெற்றியுடன் அரையிறுதியில் நுழைந்தது!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2024, 11:21 am
Aus
Quick Share

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களின் மந்தமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.

வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. இந்த நிலையில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை இழந்தனர்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்ற நிலை ஏற்பட்டது.ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரு முனையில் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார்.

மறுமுனையில் இருந்த வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததால் லிட்டன் தாஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. கடைசி வரை போராடிய லிட்டன் தாஸ் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதனால் வங்காளதேச அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.அரையிறுதி ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு நடைபெறும்.

Views: - 290

0

0