கடைசி ஓவரில் ஹூரோவான அர்ஜூன் : மும்பையின் தரமான செய்கை… குவியும் பாராட்டு…!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2023, 9:23 am

ஐபிஎல் 16ஆவது சீசன் 25ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஹைதராபாத்தில் துவங்கி நடைபெற்ற இப்போட்டியில் சன் ரைசர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் கேமரூன் கிரீன் 64 (40), இஷான் கிஷன் 38 (31), திலக் வர்மா 37 (17) ஆகியோர் அபாரமாக செயல்பட்டு ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இதனால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 192/5 ரன்களை குவித்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஓபனர் மயங்க் அகர்வால் 48 (41), கேப்டன் எய்டன் மார்க்கரம் 22 (17), ஹென்ட்ரி கிளாசின் 36 (16) ஆகியோர் மட்டும்தான் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இறுதியில் மார்கோ யான்சன் 13 (6), வாஷிங்டன் சுந்தர் 10 (6) ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அப்துல் சமத் மற்றும் புவனேஷ்வர் குமார் களத்தில் இருந்தநிலையில், அர்ஜூன் பந்து வீசினார்.

முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில், இரண்டாது பந்தில் சமத் ரன் அவுட் ஆனார், அடுத்த இரண்டு பந்துகளில் 5 ரன்கள் எடுக்கப்பட்டன.

5வது பந்தை எதிர்கொண்ட புவனேஷ்வர் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். சன் ரைசர்ஸ் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 178/10 ரன்களை சேர்த்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார் அர்ஜுன் டெண்டுல்கர்.

இந்த தொடரில் அர்ஜூன் பங்கேற்கும் இரண்டாவது போட்டி இது. முதல் விக்கெட்டை வீழ்த்திய அர்ஜூனுக்கு முன்னாள் வீரர்கள் உள்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!