ஆஸி., அணியின் மேஜிக் பவுலர் ஷேன் வார்னே காலமானார்… கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
4 March 2022, 8:02 pm
Quick Share

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (52) மாரடைப்பு காரணமாக காலமானார்.

தாய்லாந்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

1992ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமான அவர், 15 ஆண்டுகள் விளையாடியுள்ளார். 10 முறை 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

சுழற்பந்தில் கைதேர்ந்தவரான இவர், டெஸ்ட் கிரிக்கெட் 708 விக்கெட்டுக்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 293 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். 2008ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அறிமுகமாகிய போது, வார்னேவின் தலைமையில் விளையாடிய ராஜஸ்தான் அணி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஷேன் வார்னேவின் மறைவு, கிரிக்கெட் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1253

0

0