‘நிஜமாவே புஷ்பா ஸ்டெயிலு’… மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த வார்னர் ; வைரலாகும் வீடியோ…!!

Author: Babu Lakshmanan
12 January 2024, 2:36 pm

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த 6ம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, டி20 போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக வார்னர் விளையாடி வருகிறார். எஸ்சிஜி மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் சிட்னி தண்டர்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக வார்னர் ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதைப் போல, மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கினார்.

ஹண்டர் பள்ளத்தாக்கில் நடந்த தனது சகோதரரின் திருமணத்தில் கலந்து கொண்ட வார்னர், மைதானத்திற்கு காரில் வந்தால் தாமதமாகும் என்பதால், ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?