ஐபிஎல் தொடரே வேண்டாம்.. சாபத்தை முறியடித்த இங்கிலாந்து : ட்ரெண்டாகும் #BoycottIPL..கொந்தளித்த ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 6:06 pm
IL Boycott- Updatenews360
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் டாப் ஆர்டர் முற்றிலும் ஏமாற்றியது. விராட் கோலி – ஹர்திக் பாண்ட்யா மற்றும் போராடியதால் 20 ஓவர்களில் 168/6 ரன்களை அடித்துள்ளார். சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் ஜோடியே ஆட்டத்தை முடித்தனர். இந்தியாவின் பவுலிங் மோசமாக சொதப்பியதால் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வென்றனர்.

இந்நிலையில் இந்த படுதோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா மனவேதனையுடன் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மிகவும் வருத்தமாக இருக்கிறது. சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம். தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம். இதனால் தான் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் கசிந்தன.

திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் தான் பிரச்சினை ஏற்படும். ஆனால் நாங்கள் அனைத்து திட்டங்களையும் சரியாக செய்தோம். 9 ஓவர்களில் 85 ரன்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பது எனக்கு தெரியும். எனினும் திட்டங்களை தொடர்ந்து செய்தேன். ஆனால் துரதிஷ்டவசமானது எனக்கூறினார்.

இந்த நிலையில் இந்தியா தோல்வியை தழுவியது ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு பக்கம் விராட் கோலி தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், ரோகித் சர்மா கேப்டன்சியால்தான் தோற்றோம் என நொந்து போயுள்ளனர்.

மேலும் தங்களது கோபத்தை பிசிசிஐ மீது கொப்பளித்துள்ளனர். பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இந்திய வீரர்கள் சரவெடி கொளுத்துகின்றனர். ஆனால் சர்வதேச போட்டிகளில் கோட்டைவிடுகின்றனர் என ஆதங்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டு செய்து வருகின்றனர்.

Views: - 1681

26

2