‘டேட்டிங் ஆப்’ மூலம் அறிமுகமாகி பாலியல் வன்கொடுமை: பிரபல கிரிக்கெட் வீரரை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

Author: Vignesh
6 November 2022, 11:04 am
Harassment Relief Fund - Updatenews360
Quick Share

ஒருபுறம் விறுவிறுப்பாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சென்று கொண்டிருக்க, மறுபுறம் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைதாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் குரூப் 2-வில் எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகும் என்பது இன்றைய போட்டி முடிவுகளின் மூலம் தெரியவரும்.

இவ்வாறு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

danushka-gunathilaka - updatenews360

சிட்னி போலீசாரால் இலங்கை கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான தான் தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்ட போதும், அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் வைத்திருந்தனர். இந்த நிலையில் தான் அவர் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சிட்னி போலீசார் கைது செய்துள்ளனர்.

சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இலங்கை அணி இன்று நாடு திரும்பியது. தனுஷ்க குணதிலகாவை போலீஸ் கைது செய்ததால் அவரை தவிர மற்ற வீரர்கள் நாடு திரும்பினர்.

danushka-gunathilaka - updatenews360

இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் புகாரில் சிக்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு நார்வே பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரிலும் சிக்கினார்.

ஆனால் அப்போது அவரது நண்பரையும், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில் தனுஷ்க குணதிலகாவிற்கு அதில் தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்டு, அவரது நண்பரை மட்டும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

danushka-gunathilaka - updatenews360

இதனிடையே, டேட்டிங் செயலி மூலம் தனுஷ்க குணதிலக்கவை சந்தித்த 29 வயது பெண், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் இந்த வார தொடக்கத்தில் சிட்னியில் உள்ள குடியிருப்பில் நடந்துள்ளது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 174

0

0