போட்டி முடிந்து ஆட்டோ கிராஃப் கேட்டு வந்த தீபக் சாஹர்… குசும்புத்தனம் செய்த தோனி ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 11:49 am
Quick Share

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தோனி மீதான அன்பை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போட்டிகளை மட்டுமல்லாமல் வெளி மைதானங்களில் நடந்த ஆட்டங்களில் கூட மஞ்சள் படையை காண முடிந்தது.

அந்த வகையில், அகமதாபாத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தனர். காரணம் என்னவென்றால், தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசனாக இருந்து விடுமோ..? என்ற அச்சத்தில் தான்.

இந்த நிலையில், நேற்று நடந்த போட்டியில் குஜராத்தை கடைசி பந்தில் தோற்கடித்து 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது. இதைத் தொடர்ந்து, தோனி ஓய்வு முடிவை அறிவித்து விடுவாரோ..? என்று அவரது பேச்சை ரசிகர்கள் எதிர்பார்த்து கேட்டனர். ரசிகர்கள் மத்திய பேசிய தோனி, என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம் என்றும், ஆனால் அடுத்த ஐபிஎல்லை விளையாட இன்னும் 9 மாதங்கள் இருக்கிறது என்று கூறியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, சென்னை அணி வெற்றி பெற்றதால் மைதானமே மகிழ்ச்சி கடலில் திளைத்துக் கொண்டிருக்கும் போது, தீபக் சாஹர், தனது டிசர்ட்டில் ஆட்டோ கிராப் போடுமாறு தோனியிடம் கேட்டார். அப்போது, முதலில் மறுப்பு தெரிவித்த தோனி, கேட்ச்சை தவற விட்ட உனக்கு ஆட்டோ கிராஃப் எல்லாம் போட முடியாது என்பது போல, ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லாவிடம் சைகை காட்டினார்.

பின்னர், அவரது டிசர்ட்டில் அவர் கையெழுத்து போட்டு அனுப்பி வைத்தார். தோனியின் இந்த குறும்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, போட்டியின் 2வது ஓவரில் கில் அடித்த கேட்ச்சை தீபக் சஹார் தவற விட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 319

0

0