தேர்தலில் களமிறங்க முன்னாள் தடகள வீராங்கனை பிடி உஷா முடிவு : ட்விட்டர் அவரே வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2022, 12:17 pm

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நேற்று அறிவித்தார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!