கடைசி நிமிடத்தில் அடுத்தடுத்து கோல்கள்.. பரபரப்பான ஆட்டத்தில் அர்ஜென்டினா வெற்றி.. பெனால்டி ஷுட் அவுட் முறையில் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Author: Babu Lakshmanan
10 December 2022, 9:16 am

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது அர்ஜென்டினா.

கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடந்து வருகிறது. லுசைல் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற 2வது கால் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா – நெதர்லாந்து அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

2வது பகுதி ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கான 2வது கோலை அடித்தார். இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து பதிலடி கொடுத்தார்.

பின்னர், வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அவரே இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார். இதனால், ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?