ஜெயிக்கற வரைக்கும் சண்ட செய்யணும் : தல தோனியை மிஸ் செய்யும் ரசிகர்கள்.. 2013 FLASHBACK!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 7:14 pm
MS Dhoni - Updatenews360
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் டாப் ஆர்டர் முற்றிலும் ஏமாற்றியது. விராட் கோலி – ஹர்திக் பாண்ட்யா மற்றும் போராடியதால் 20 ஓவர்களில் 168/6 ரன்களை அடித்துள்ளார். சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் ஜோடியே ஆட்டத்தை முடித்தனர். இந்தியாவின் பவுலிங் மோசமாக சொதப்பியதால் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வென்றனர்.

இங்கிலாந்து வெற்றியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ, ரோகித் ஷர்மாவை திட்டி வருகின்றனர். பலரும் ஐபிஎல் ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராஃபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்தது. அப்போது தோனி பேசிய DONT LOOK UP, GOD ISN’T COMING TO SAVE YOU, YOU’VE TO FIGHT IT OUT வார்த்தைகளை ரசிகர்கள் ரீவைண்ட் செய்து பார்க்கின்றனர்.

Views: - 638

15

2