ஹசில்வுட் பந்துவீச்சில் சுருண்டது டெல்லி : 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2022, 11:32 pm

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் டு ப்ளஸ்ஸிஸ் – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் டு ப்ளஸ்ஸிஸ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிக்காட்ட, மறுமுனையில் இருந்த அனுஜ் ராவத் டக் அவுட் ஆனார்.

அவரையடுத்து விராட் கோலி களமிறங்க, 8 ரன்கள் அடித்த டு ப்ளஸ்ஸிஸ் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் மேக்ஸ்வெல் களமிறங்கிங்க, விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி ரன் அவுட் ஆனார். இதையடுத்து சுயாஸ் களமிறங்கி 5 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.

அதிரடியாக ஆடிவந்த மேக்ஸ்வெல் 55 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, ஷாபாஸ் அஹமத் – டின்ஸ்க் கார்த்திக் கூட்டணி போடு அதிரடியாக ஆடி வந்தார்கள்.

இதில் தினேஷ் கார்த்திக் 66 ரன்கள் அடித்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்ளான வார்னே மற்றும் பிரித்திவி ஷா அதிர காட்டினர்.

16 ரன்கள் எடுத்த பிரித்திவி ஷா சிராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்முது களமிறங்கிய மார்ஷ் 14 ரன்னில் அவுட் ஆக, மறுமுனையில் இருந்த வார்னர் அதிரடி காட்டினார்.

ஆனால் எதிர்பாராத விதமாக எல்பிடபுள்யூவில் வார்னர் வெளியேற, ஒரு பக்கம் பண்ட் நிதானமாக ஆடினார். ஆனால் அவருக்கு இணையாக வந்த போவெல், யாதல் சொற்ப ரன்னில் வெளியேறினர். 34 ரன்கள் எடுத்திருந்த பண்ட் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார்.

டெல்லி அணியின் பவுலர் தாக்கூர் பொறுமையாக விளையாடினார். கடந்த போட்டிகளை போல அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் 17 ரன்னல் வெளியேறினார். போட்டியின் வெற்றி பெங்களூரு அணிக்கு பிரகாசமாக இருந்தது.

19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் டெல்லி அணி எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 27 ரன் தேவைப்பட்ட போது டெல்லி அணி7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம்.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?